இலங்கையில் சரித்திரம் படைத்த நேபாள அணி (வீடியோ)
மகளிர் ஆசிய கிண்ணத் தொடரில் நேபாள அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கையில் மகளிர் அணிகளுக்கான ஆசிய கிண்ண டி20 தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற நேபாளம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக குஷி ஷர்மா 36 (39) ஓட்டங்களும், கவிஷா 22 (26) ஓட்டங்களும் எடுத்தனர். இந்து பர்மா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
HISTORY CREATED BY NEPAL....!!!
— Johns. (@CricCrazyJohns) July 19, 2024
- Nepal won their first ever match in Women's Asia Cup history. ? pic.twitter.com/V8CwPaybqe
அடுத்து களமிறங்கிய நேபாள அணி 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியில் மிரட்டிய சம்ஜன கட்கா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். அமீரக அணி தரப்பில் கவிஷா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |