பெண்களை மட்டும் அதிகமாக பாதிக்கும் நோய்களும் அதன் அறிகுறிகளும்...கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பெண்கள் தங்கள் வாழ்நாளில் சந்திக்கும் நோய்களை பற்றியும், அதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை பற்றியும் இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு முறிவு)
மாதவிடாய் நின்ற பெரும்பாலான பெண்கள் இந்த பிரச்சினையை சந்தித்து வருகிறார்கள். எலும்பு முறிவுடன் இதை அனுபவித்து வருகிறார்கள்.
வயது ஆக ஆக அவர்கள் கால்சியம் குறைப்பாட்டை சந்திக்கின்றனர் இதுவே பின்னாளில் எலும்பு முறிவுக்கு வழி வகுக்கிறது.
ஏனெனில் எலும்பின் அடர்த்தியை பராமரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
மாதவிடாய் நின்ற பின் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து விடுகிறது. இதுவே பின்னாளில் எலும்பு முறிவுக்கு வழி வகுக்கிறது.
மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் காணப்படும் பெரிய புற்றுநோயாகும். குடும்பத்தில் யாரேனும் மார்பக புற்று நோயால் பாதிப்படைந்து இருந்தால் அவர்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.
அதிக கொழுப்பு உணவு, உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்றவை உடல் நல பாதிப்புகளை உண்டாக்குகிறது.
எனவே பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்தாக வேண்டும். ஆண்டுதோறும் மார்பக பரிசோதனையை செய்து வர வேண்டும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
இதுவும் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு வகை புற்றுநோயாகும். இது பெரும்பாலும் ஹெச்.பி. வி (மனித பாப்பிலோமா வைரஸ்) காரணமாக தொற்றுநோயால் ஏற்படுகிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது கர்ப்பப்பை வாய் மேற்பரப்பில் உள்ள அசாதாரண முன்கூட்டிய உயிரணுக்களிலிருந்து உருவாகிறது.
இது ஆரம்பகால கண்டறிதலுக்கு போதுமான நேரத்தை அளிக்கிறது. எனவே ஆரம்ப காலத்திலேயே இந்த புற்றுநோய் கட்டிகளை கண்டறிவதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.
பித்தப்பை கற்கள்
அதிக உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்ட பெண்கள் பித்தப்பை கற்கள் பிரச்சினைக்கு உள்ளாகின்றன. மரபணு ரீதியாக பெண்கள் இத்தகைய பாதிப்பை அடைகின்றன.
உடம்பில் அதிக கொழுப்பு தேக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுறுசுறுப்பான செயல்பாடுகளில் ஈடுபடாத பெண்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆளாகின்றன
சிறுநீரக பாதை நோய்த்தொற்று
ஆண்களை விட பெண்களுக்கு குறுகிய சிறுநீர்ப்பை இருப்பதால் பெண்கள் எளிதாக சிறுநீர்ப் பாதை தொற்றுக்கு உள்ளாகி விடுகிறார்கள். பெண்களின் சிறுநீர்ப் பாதையை பாக்டீரியாக்கள் சீக்கிரமே அடைந்து அங்கு நோய்த்தொற்றை உருவாக்கி விடுகிறது.
எனவே பெண்கள் எப்போதும் தங்கள் அந்தரங்கப் பகுதியைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது அவசியம் என்கின்றனர் மகளிர் நல மருத்துவர்கள்.