ஹொங்கொங் சீனா அணியை பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் படை
மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஹொங்கொங் சீனாவை வீழ்த்தியது.
ஷாவால் ஸுல்ஃபிகர் 47
பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் சீனா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ஷாவால் ஸுல்ஃபிகர் 47 (35) ஓட்டங்களும், ஆயிஷா ஜாஃபர் 26 (19) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜோய்லின் கவுர் 4 விக்கெட்டுகளும், இக்ரா சாகர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சுருண்ட ஹொங்கொங் சீனா
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி 19 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேரி சான் (Kary Chan) 30 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய நஷ்ரா சந்து (Nashra Sandhu) 6 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, சாதியா இக்பால், உம்-இ-ஹனி மற்றும் ஆயிஷா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |