மகளிர் பிக் பாஷ் 2026: 125 ஓட்டங்கள் இலக்கை எட்ட முடியாமல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் தோல்வி
Women perth scorchers beat melbourne by 15 runs: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மகளிர் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணிக்கு எதிரான பிக் பாஷ் 2026 போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
124 ஓட்டங்களே எடுத்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதிய, மகளிர் பிக் பாஷ் 2026 தொடர் போட்டி ஜங்க்ஷன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ஓட்டங்களே எடுத்தது.
அதிகபட்சமாக அலானா கிங் 18 ஓட்டங்களும், ச்லோ ஐன்ஸ்வொர்த் 16 ஓட்டங்களும் எடுத்தனர். சார்லோட் டீன் மற்றும் சோபி டே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சோபி டிவைன், அலானா கிங் மிரட்டல்
பின்னர் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சோபி டிவைன், அலானா கிங்கின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
6 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.1 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக அணித்தலைவர் மெக் லென்னிங் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்தார். சோபி டிவைன் 4 விக்கெட்டுகளும், அலானா கிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
