பிரான்சில் இஸ்லாத்தின் பெயரில் நடந்த பயங்கரம்! கொல்லப்பட்ட பெண் பொலிஸ்! வெளியான கொலையாளி புகைப்படம்
பிரான்சில் காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபர் யார் என்பது குறித்தும், அவனுடைய புகைப்படமும் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே Rambouillet நகரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணியளவில், திடீரென கத்தியுடன் புகுந்த ஒருவர் Stephanie (49) எனும் பெண் காவல் அதிகாரியை கடுமையாக குத்தி கொலை செய்தார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை தடுக்க முயன்றும் முடியாத காரணத்தினால், பொலிசார் அந்த நபரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றுவிட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், காவல்நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jamel Gorchane என்பதும், இவர் துனிசியாவைச் சேர்நதவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதியான இவன், அந்த பெண் பொலிசாரை குத்தி கொல்லும் போது, அல்லாஹு அக்பர் என்று கத்திய படியே குத்தியுள்ளான்.
36 வயது மதிக்கத்தக்க இவன், கடந்த 2009-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக பிரான்சிற்குள் புகுந்துள்ளார். அதன் பின் தஞ்சம் கோரிய நிலையில், இவருக்கு தற்காலிக விதிவிட உரிமை வழங்கப்பட்டது.
அதுவும் வரும் டிசம்பர் மாதம் முடிவிற்கு வரவிருந்த நிலையில், இந்த தாக்குதலை அவன் நடத்தியுள்ளான்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் படி, இவன், Thiais (Val-de-Marne) பகுதியில் வசித்து வந்துள்ளான்.
ஆனால் பல காலமாக Rambouillet தங்கி இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.