20 ஓவர் பெண்கள் பிரீமியர் லிக் போட்டி இன்று தொடக்கம்
பெண்களுக்கான பிரீமியர் லிக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று மும்பையில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
டபிள்யூ.பி.எல்
பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அறிவித்தது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
டபிள்யூ.பி.எல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் மொத்தம் 87 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் போட்டியில் குஜராத்-மும்பை மோதல்
உலகின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, எலிஸ் பெர்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, நாட் சிவெர், ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, தீப்தி ஷர்மா, அலிசா ஹீலி போன்ற தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் போட்டியை சுவாரசியப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஸ்மிர்தி மந்தனா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கேப்டனாக உள்ளனர்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக் லானிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், பெத் மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், அலிசா ஹூலி உ.பி.வாரியர்ஸ் அணிக்கும் கேப்டனாக இருக்கின்றனர்.
@99mobiles
இன்றைய தொடக்க லீக் ஆட்டம் நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.