அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விங் கமாண்டரின் மகள்
ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு, யுபிஎஸ்சி தேர்வில் 1094 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த விங் கமாண்டரின் மகள் இவர் தான்.
யார் அந்த பெண்
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். இஷிதா கிஷோர், மறைந்த விமானப்படை அதிகாரியின் மகள்.
இவரது தாயார் ஒரு தனியார் பள்ளியில் கற்பித்தார். மூத்த சகோதரர் ஒரு வழக்கறிஞர். இஷிதா விமானப்படை பால் பாரதி பள்ளியில் பயின்றார்.
தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையான இஷிதா, 2012 இல் நடந்த சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் தனது பள்ளி மற்றும் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இருப்பினும், இந்திய விமானப்படையில் விங் கமாண்டர் ஆக இருந்த அவரது தந்தை 2004 ஆம் ஆண்டு காலமானபோது அவரது வாழ்க்கை வேறு திசையில் திரும்பியது.
ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரயில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார் இஷிதா. பின்னர் உலகின் நான்கு பெரிய நிறுவனங்களில் ஒன்றான எர்ன்ஸ்ட் & யங்கில் வேலைக்குச் சேர்ந்தார்.
இருப்பினும், UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவதற்காக தனது வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதற்காக ஒரு நாளைக்கு 8-9 மணிநேரம் தேர்வுக்குத் தயாராகச் செலவிட்டார்.
பொருளாதாரப் பின்னணி இருந்தபோதிலும், அவர் விருப்பப் பாடமாக அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இஷிதா எழுத்துத் தேர்வில் 901 மதிப்பெண்களும், ஆளுமைத் தேர்வில் 193 மதிப்பெண்களும் பெற்றார். முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய நிலையில், தனது மூன்றாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
2023 ஆம் ஆண்டு UPSC தேர்வில் முதலிடம் பிடித்த IAS இஷிதா கிஷோர், தற்போது உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் கூட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஜூலை 2025 இல் மாநில நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |