2026 மகளிர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி 8வது முறை சாம்பியனான இந்தியா!
WOMEN'S ASIA CUP 2026 Final India Beats Sri Lanka: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
இந்திய அணியின் அதிரடியான பேட்டிங்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
🇮🇳🏆 CHAMPIONS! 🏆🇮🇳
— UDAI LAL OJHA (@UDAILALOJHA1200) September 13, 2026
TEAM INDIA WOMEN HAVE WON THE ASIA CUP 2026! 🔥🏏
India beat Sri Lanka by 72 runs in the final! 💙🇮🇳
8th Asia Cup title for India! 🏆🔥
JAI HIND 🇮🇳#INDvsSL #TeamIndia #WomensAsiaCup2026 pic.twitter.com/BylJK9ENt9
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 39 பந்துகளில் 59 ஓட்டங்களும், ஷஃபாலி வர்மா(Shafali Verma) 39 பந்துகளில் 68 ஓட்டங்களும் குவித்து மிரட்டினர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி
184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சமரி அதபத்து(Chamari Athapaththu) 32 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்து போராடினார்.
India, Indiaaaaaaaa..... 🇮🇳
— Smriti Z Irani (@smritiirani) September 13, 2026
Heartiest congratulations to our Indian Women’s Cricket Team on winning the Women’s Asia Cup 2026. This remarkable triumph reflects the team’s hard work, determination and belief.
Your performance has made the entire nation proud. Wishing the… pic.twitter.com/hJv1Qipmrc
விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களிலும், நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஶ்ரீ சரணி(Shree Charani) 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.
𝐂𝐑𝐎𝐖𝐍𝐄𝐃 𝐀𝐆𝐀𝐈𝐍 👑
— ICC (@ICC) September 13, 2026
India showcased their dominance with an unprecedented eighth Women’s Asia Cup title, defeating Sri Lanka in the final in style 👊
How it unfolded ➡️ https://t.co/AUjCTQEkz0 pic.twitter.com/tpnJx2ts2u
இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |