மேயரின் மனைவியாகும் வாய்ப்பை தவறவிட்ட இளம்பெண்ணின் வருத்தம்
நியூயார்க் நகர மேயராக, புலம்பெயர் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயம் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறது.

மேயரின் மனைவியாகும் வாய்ப்பை தவறவிட்ட இளம்பெண்
நியூயார்க் நகர மேயராக, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இந்தியப் பெண்ணான மீரா நாயரின் மகனான ஸோக்ரான் மம்தானி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்புக்கே சவால் விடும் வகையில் அவர் ஆற்றிய உரை மற்றும், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்துக்களால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பலரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஸோக்ரான்.
இந்நிலையில், மேயரின் மனைவியாகும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக சமூக ஊடகம் ஒன்றில் இளம்பெண்ணொருவர் வெளியிட்டுள்ள செய்தி வைரலாகியுள்ளது.
Hinge என்னும் டேட்டிங் ஆப் மூலமாகத்தான் தன் மனைவியான Rama Duwajiஐ சந்தித்துள்ளார் ஸோக்ரான்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்குமுன் ஸோக்ரானை அதே Hinge என்னும் டேட்டிங் ஆப் மூலமாக சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக தெரிவித்துள்ளார் Naomi என்னும் பெண்.
Fumble of the century pic.twitter.com/3eKmlL02eP
— naomi (@lachancenaomi27) November 5, 2025
ஆனால், ஸோக்ரானுடைய உயரம் குறித்து சந்தேகம் எழுந்ததால் அவரை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டாராம் அந்தப் பெண்.
ஸோக்ரானை சந்திக்கக் கிடைத்த அந்த வாய்ப்பைத் தான் தவறவிட்டதற்காக இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
அத்துடன், டேட்டிங் தளங்களில் பெரும்பாலும் உயரம் போன்ற விடயங்களில் பலர் பொய்தான் சொல்வார்கள்.
ஆனால், ஸோக்ரான் அப்படியல்ல, அவர் நேர்மையானவர் என்கிறார் அந்தப் பெண்.
அவரது இடுகையைப் படித்த பலரும், அடடா நியூயார்க் மேயரின் மனைவியாகும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டாரே இந்தப் பெண் என்னும் ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |