பெண் என்றால் சமையலறையில் இருக்கவேண்டும் என்று சீண்டிய நண்பன் மீது தீவைத்த பெண்
பெண் என்றால் சமையலறையில் இருந்து சமைக்கவேண்டும், ஆண்களுடன் குடித்துக்கொண்டிருக்கக்கூடாது என்று கூறியதால், கோபத்தில் தன் நண்பர் மீதே பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார் ஒரு பெண்.
கோபத்தில் நண்பன் மீது தீவைத்த பெண்
இந்த சம்பவம் நிகழ்ந்தது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில்.
நீண்ட கால நண்பர்களான கோர்பி (Corbie Jean Walpole, 24) என்னும் பெண்ணும் அவரது நண்பரான ஜேக்கும் (Jake Loader, 23) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார்கள்.
பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையிலும், இருவரும் மது மற்றும் போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், ஜேக், கோர்பியை வம்புக்கிழுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில், உன்னால் ஆண்களுடன் குடிப்பதை சமாளிக்க முடியவில்லை என்றால் பேசாமல் சமையலறையில் உட்கார்ந்து சமைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதானே என்று ஜேக் கூற, கோபத்தின் உச்சத்துக்கே சென்ற கோர்பி வீட்டுக்குள் சென்று பெட்ரோலை எடுத்துவந்து ஜேக் மீது ஊற்றியுள்ளார்.
லைட்டர் ஒன்றைக் காட்டி தீவைத்துவிடுவதாக கோர்பி மிரட்ட, கொளுத்து பார்க்கலாம் என ஜேக் மீண்டும் சீண்ட, அவர் மீது தீவைத்தேவிட்டார் கோர்பி.
உடலின் 55 சதவிகித பாகங்களும் தீயால் எரிந்துவிட, எட்டு நாட்கள் கோமாவிலிருந்த ஜேக், 74 நாட்கள் தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்துள்ளார்.
10 அறுவை சிகிச்சைகளுக்குப்பின்பும், அவரது வியர்வை சுரப்பிகள் வரை தீ பாதித்துவிட்டதால் கடுமையாக அவதியுற்றுவருகிறார் ஜேக்.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, மே மாதம் 8ஆம் திகதி, நீதிமன்ற விசாரணைக்கு வந்த கோர்பி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தனது செயல்களுக்கு வருத்தமும் தெரிவித்துக்கொண்டார். வழக்கு தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |