கோல் மழை பொழிந்து சுவிஸை பந்தாடிய ஸ்பெயின்! முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி
மகளிர் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
ஸ்பெயின் அதிரடி ஆட்டம்
ஈடன் பார்க் அவுடர் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீராங்கனை அயிட்டன பொன்மட்டி மிரட்டலாக கோல் அடித்தார்.
AP Photo/Andrew Cornaga
அந்த அணியின் மற்றொரு வீராங்கனையான லையா கொடினா, 11வது நிமிடத்தில் பந்தை கோல் கீப்பருக்கு கடத்த முயன்றார். ஆனால், கோல் கீப்பர் நீண்ட தூரம் முன்னேறி வந்ததால் அந்த பந்தை தவற விட்டுவிட்டார். இதனால் Own Goal ஆக மாறியது.
அற்புதமான கோல்
அதன் பின்னர் ஸ்பெயின் வீராங்கனைகள் அதகளம் செய்தனர். 17வது நிமிடத்தில் அல்பா ரேடோண்டோ தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அயிட்டன கால்களில் வித்தை காட்டி தனது இரண்டாவது கோலை (36வது நிமிடம்) அடித்தார்.
Reuters
உலகக்கோப்பைக்கு தகுதி
45வது நிமிடத்தில் லையா மிரட்டலாக கோல் அடித்து தனது Own Goal தவறை திருத்திக் கொண்டார்.
AP
ஜெனிபர் ஹெர்மொசோ 70வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடிக்க ஸ்பெயின் 5-1 என்ற கோல் கணக்கில் சுவிஸை வீழ்த்தியது.
இதன்மூலம் முதல் முறையாக மகளிர் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றது.
AP Photo/Abbie Parr
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |