சதம் விளாசிய வீராங்கனைகள்: அயர்லாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ப்ரெடியில் நடந்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. ஏமி ஹன்டர் 67 ஓட்டங்களும், ரெபெக்கா 57 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹேலே மேத்யூஸ், ஸ்டாஃபானி சதம்
அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஸ்டாஃபானி டெய்லர் (Stafanie Taylor) 100 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |