இந்தியா வந்த ஜேர்மன் தூதரை வியப்பில் ஆழ்த்திய பெண்கள்
இந்தியாவுக்கு வந்த ஜேர்மன் தூதர், பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் கண்ட காட்சியால் வியப்பில் ஆழ்ந்துள்ளார். இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Walter J Lindner, டில்லியிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பெண்கள் வேலை செய்வதை கவனித்துள்ளார். முழுவதும் அங்கு பெண்கள் மட்டுமே பணி புரிவதைக் கண்ட Walter, அது குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, அந்த பெட்ரோல் விற்பனை நிலையம் முற்றிலும் பெண்களால் நடத்தப்படுவதை அறிந்துகொண்ட அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். ஆச்சரியம் தாங்காத Walter, ட்விட்டரில் தான் பார்த்த காட்சியை புகைப்படமாக வெளியிட்டதுடன், அது குறித்து ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தியில், முழுவதும் பெண்களாலேயே நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் டில்லியிலுள்ள இந்த பெட்ரோல் நிலையத்தைப் பாருங்கள்.
Have you heard about all-women petrol stations in Delhi? Well, here is maybe the one known to most - Bharat Petroleum @BPCLimited Shantipath run solely by women (22 in 3 shifts). Great talking to them! All so friendly, professional with warm smiles?. Nothing women can’t do!♀️ pic.twitter.com/Tf1uXHfFmw
— Walter J. Lindner (@AmbLindnerIndia) July 4, 2021
இந்த பெட்ரோல் நிலையத்தை முழுவதும் பெண்களே நிர்வகிக்கிறார்கள். 22 பெண்கள், மூன்று ஷிஃப்ட்களில் இங்கு பணி புரிகிறார்கள்.
அவர்களிடம் பேசினேன், மிகவும் அன்புடன், புன்னகையுடன், அதே நேரத்தில் தொழில் முறையில் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. பெண்களால் செய்ய முடியாத ஒன்றுமே இல்லை, என ஆஹாஓஹோவென புகழ்ந்து தள்ளியிருக்கிறார் Walter.
64 வயதாகும் Walter, மனித உரிமைகள் குழுவில் துணை இயக்குநர், வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர், கென்யா, செஷல்ஸ், வெனிசுலா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கான தூதர், இசைக்கலைஞர் என பன்முகத்திறன் கொண்டவராவார்.