லண்டனில் 5 நாட்கள் முன்னர் பிறந்த குழந்தையுடன் மாயமான 19 வயது இளம் தாயார்! முக்கிய தகவல்
லண்டனில் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் இளம் தாயார் மாயாகியுள்ளார்.
கிழக்கு லண்டனின் பார்க்கிங்கில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு வந்த ரொக்சானா என்ற 19 வயது இளம்பெண் கடந்த 29ஆம் திகதி மாலை 8 மணியளவில் அங்கிருந்து வெளியே சென்றார்.
5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் ரொக்சானா அங்கிருந்து வெளியே வந்த நிலையில் பின்னர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன போது வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தார் ரொக்சானா. இந்த நிலையில் தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
ரொக்சானாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறுமாறு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் ரொக்சானாவையும் அவர் குழந்தையையும் தொடர்ந்து தேடி வருகிறோம்.
ரொக்சானாவை எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.