பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள் - தமிழ்நாட்டின் இடம் என்ன?
பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணியிட விருப்பங்கள் குறித்து Wheebox என்ற அமைப்பு, "இந்திய திறன் அறிக்கை 2025" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள்
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2019 ஆம் ஆண்டில் வேலைக்கு தகுதியான பெண்கள் 45.6 சதவீதமாக இருந்தது, தற்போது 47.53 சதவீதமாக உள்ளது.
இதே போல், பெண்கள் எந்த மாநிலத்தில் பணி செய்ய விரும்புகின்றனர் என்பது தொடர்பானபட்டியலையும் இதில் வெளியிட்டுள்ளனர்.
இதில், ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும், கேரளா 2வது இடத்திலும், குஜராத் 3வது இடத்திலும் உள்ளது.
தமிழ்நாடு இந்த பட்டியலில் 4வது இடம் வகிக்கிறது.

அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா 5வது இடத்திலும், டெல்லி 6வது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 7வது இடத்திலும், கர்நாடக 8வது இடத்திலும், மத்திய பிரதேசம் 9வது இடத்திலும், ஹரியானா 10வது இடத்திலும் உள்ளது.
அந்தந்த மாநிலங்களில் நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல், சமூக பொருளாதார மாற்றங்கள், உட்கட்டமைப்பு ஆகியவை பெண்களை ஈர்க்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |