பெண்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தில் பணியாற்ற தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த மையத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தகுதியுடையவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதன்படி தகவல் தொழிநுட்ப பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராக இருக்கவேண்டும்.மாத ஊதியம் ரூ18,000 வழங்கப்படும்.
வழக்கு பணியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்ட சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் அனுபவமிக்க, உள்ளூர் பெண்களாக மற்றும் வாகனம் ஓட்ட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ15,000 வழங்கப்படும்.
பன்முக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்,முன்னனுபவமிக்க உள்ளூர் பெண்களாகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ6,400 வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் https://chennai.nic.in இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப் 5ஆம் தேதி மலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |