20 ஓவர் பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப் போட்டி: கோப்பையை ஜெயிக்கப் போவது யார்?
பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதும் போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
பெண்கள் பிரிமீயர் லீக் போட்டி
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
@cricbuzz
இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் களமிறங்கின.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
@cricbuzz
மும்பை அணி 2-வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறின.
மும்பையில் இறுதிப் போட்டி
பெண்கள் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.
இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
@cricbuzz
பலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் கோப்பையை வசப்படுத்த எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளுக்கும் இடையேயான லீக் ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
@cricbuzz
ஒரு ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.
இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.