மகளிர் 33% இட ஒதுக்கீட்டு மசோதா: இரு அவைகளிலும் நிறைவேறியது
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.
மசோதா நிறைவேறியது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 456 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தும் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்னும் நிலையில், வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.
எதிரான 2 வாக்குகள்
மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமின் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
முஸ்லீம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை நிராகரித்ததால், அவர் இம்மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்.
அவரை தொடர்ந்து பிரேம்சந்திரன் என்பவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார், பின்னர் அதனை திரும்ப பெற்றார்.
இதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான வாக்கு ஒன்றாக குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |