சேம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணி... மாபெரும் பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாபெரும் பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
உற்சாகமும் ஊக்கமும்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள தகவலில், உலகக் கிண்ணம் வென்ற மகளிர் அணிக்கு ரூ.51 கோடி ரொக்கப் பரிசை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டில், இந்தியா உலகக் கிண்ணம் வென்றதன் ஊடாக, அணித்தலைவர் கபில் தேவ் கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தையும் ஊக்கத்தையும் கொண்டு வந்தார்.
அப்படியான உற்சாகமும் ஊக்கமும் இன்றைய மகளிர் அணியாலும் கொண்டுவரப்படுள்ளது என குறிப்பிட்டுள்ள தேவஜித் சைகியா, ஹர்மன்ப்ரீத் கவுரும் அவரது அணியும் இன்று கிண்ணத்தை வென்றது மட்டுமல்லாமல், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளனர் என்றார்.
14 மில்லியன் டொலர்
முன்னதாக கடந்த மாதம், ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா மகளிருக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்திருந்தார். மட்டுமின்றி, முன்னர், பரிசுத் தொகை 2.88 மில்லியன் டொலர்களாக இருந்தது, தற்போது அது 14 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என ஒட்டுமொத்த அணிக்கும் ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனால் ஐசிசி பரிசுத்தொகையுடன் சேர்த்து, மகளிர் அணி மொத்தமாக ரூ 116 கோடி தொகையைக் கைப்பற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |