லொட்டரியில் பரிசு விழுந்ததும் என் காதலி என்னைக் கழற்றிவிட்டுவிட்டார்: பிரித்தானியர் கண்ணீர்
லொட்டரியில் கிடைக்கும் பரிசு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நினைத்தால், எல்லோருக்கும் அப்படி இல்லை போலிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பிரித்தானியாவில் லொட்டரியில் பரிசு வென்ற ஐந்து தம்பதியர் பிரிந்திருக்கிறார்கள்.
லொட்டரியில் பரிசு விழுந்ததும் காதலரைக் கழற்றிவிட்ட காதலி
அப்படித்தான், கடந்த ஆண்டில், இங்கிலாந்தின் Spalding என்னுமிடத்தைச் சேர்ந்த மைக்கேல் (Michael Cartlidge, 39) என்பவரும், அவரது காதலியான சார்லட் (Charlotte Cox, 37) என்பவரும், லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.
Credit: Louis Wood
அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, என்ன நினைத்தாரோ தெரியாது, மைக்கேலுக்கு பரிசுப்பணத்தில் பங்கு தரமுடியாது என்று கூறிவிட்டார் சார்லட்.
லொட்டரிச்சீட்டு வாங்கச் சொல்லியதே நான்தான் என்கிறார் மைக்கேல், அவர் உளறுகிறார், நான்தான் லொட்டரிச்சீட்டுக்கு பணம் கொடுத்தேன் என்கிறார் சார்லட்.
Credit: Louis Wood
தான் சார்லட்டை லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்குமாறு கூறியதாகவும், அவர் லொட்டரிச்சீட்டு வாங்குவதற்கெல்லாம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகவும், நீ வாங்கு, நான் என்னிடமுள்ள பணத்தை உனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன் என தான் கூறியதாகவும் கூறும் மைக்கேல், தான் உடனே தன் வங்கிக்கணக்கிலிருந்து சார்லட்டுக்கு பணம் அனுப்பியதாகவும் கூறுகிறார்.
காதலி மறுப்பு
ஆனால், மைக்கேல் ஏதோ உளறுகிறார், நான்தான் லொடரிச்சீட்டுக்கு பணம் கொடுத்தேன். ஆகவே, அது என் பணம் என்கிறார் சார்லட்.
இவையெல்லாம் நடந்தபோது, சார்லட் வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார் மைக்கேல். ஆகவே, தன் நண்பர்கள் சிலர் மூலம், மைக்கேலை தன் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கிறார் சார்லட்.
Credit: Louis Wood
முதலில் பணத்தை இருவருமாக பிரித்துக்கொள்ளுங்கள் என லொட்டரி நிறுவனம் கூறியிருந்த நிலையில், இம்மாதம் 10ஆம் திகதி, அந்த லொட்டரி நிறுவனத்தை ஆல்வின் என்னும் ஒருவர் பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளார்.
Credit: Louis Wood
அவர், பிரச்சினையை ஏற்படுத்திய லொட்டரிச்சீட்டை வாங்கிப்பார்த்துவிட்டு, அதன் பின்னால் சார்லட்டின் பெயர் எழுதியிருப்பதைக் கண்டு, விதிப்படி, லொட்டரிச்சீட்டின் பின்னால் யார் பெயர் எழுதியிருக்கிறதோ, அவர்தான் அதன் உரிமையாளர். ஆகவே, பரிசுத்தொகை சார்லட்டுக்குத்தான் என்று கூறிவிட்டார்.
ஆனால், இருவரும் சேர்ந்துதான் லொட்டரிச்சீட்டு வாங்கினோம். ஆகவே, அந்த தொகையில் பாதியைத் தனக்குத் தருவதுதான் நியாயம் என்று கூறும் மைக்கேல், தான் நீதிமன்றம் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார். லொட்டரிச்சீட்டில் விழுந்த பரிசால் காதல் காணாமல் போய்விட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |