இதுவரை கண்டிராத பெரிய கோவிலின் அதிசயங்கள்!
இந்த உலகத்தில் தாஜ் மஹால், சீனா பெருஞ்சுவர் என ஏழு அதிசயங்கள் காணப்படுகின்றன.
ஆனால் இதில் இருக்கும் அமைப்புகளை விட தஞ்சை பெருங்கோவிலில் உள்ள உற்புற அமைப்பு, வெளிப்புற அமைப்பு, சிலை சிற்பம் , ஓவியங்கள் அனைத்தும் வியக்கத்தக்கதாக இருக்கும்.
தஞ்சை பெருங்கோவிலைக் கட்டி சுமார் 1000 வருடங்களுக்கு மேலாக இருக்கும்.
பல நுட்ப முறையுடன் இந்த கோவிலைக் கட்டியது மன்னன் இராஜ ராஜ சோழன்.
இப்படிப்பட்ட இந்த பெருங்கோவிலை இன்று வரை யாராலும் கட்ட முடியவில்லை. அதற்குள் பல அதிசயங்களும் மறைமுகமாக காணப்படுகின்றது என கூறப்படுகிறது.
அந்தவகையில் என்னென்ன அதிசயங்கள் என்று பார்க்கலாம்.
விமானம்
- 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மேல் 80 கிலோ எடை கொண்ட கிரானைட்டை எவ்வாறு அவ்வளவு தூரம் கொண்டு சென்றார்கள் என்பது இன்னும் தெரியாத உண்மையே...
கிரானைட்டுகள்
- இந்த பெருங்கோவிலை கிரானைட்டுகள் கொண்டே முழுக்க முழுக்க கட்டியுள்ளனர்.
- இதில் என்ன அதிசயம் என்றால்? கிரானைட்டுகள் கோவிலை சுற்றி இல்லை.
- அவ்வாறு இருக்கையில் கனத்தூரத்தில் இருந்து யானை கொண்டு தான் தேவையான பொருட்களை கொண்டுவந்துள்ளனர்.
- இதற்காக 1000 யானைகளும் 5000 குதிரைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
சிவலிங்கம்
- கோவிலின் கருவறையில் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது.
- அதின் எடை 20டன் என கூறப்படுகிறது.
நந்தி
- இந்த கோவிலில் 8 நந்தி சிலைகள் காணப்படுகின்றன.
- இந்த சிலைகள் அனைத்தும் ஒரு கல்லிலே செய்யப்பட்டுள்ளன.
- சிறந்த ஒரு நுட்பமுறையில் இதனை கட்டியுள்ளனர்.
நிழல்
- பகலில் தஞ்சை பெருங்கோவிலின் நிழல் தரையில் விழாது.
- அதற்கு மாறாக அதன் மேலேயே நிழல் விழுந்துவிடும்.
- இதுவும் ஒரு விதமான நுட்பமுறை என்று கூறுகின்றார்கள்.
சுரங்கபாதை
- கோவிலின் கீழ் 100 இற்கு மேற்பட்ட சுரங்கபாதை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
- அதில் ஒரு சில சுரங்கபாதைகள் இராஜ ராஜ சோழனின் அரண்மனைக்கு கொண்டு செல்லும்.
- இதனை மன்னர்கள் மட்டுமே பயன்படுத்துவர்.
இரகசிய பாதை
- இந்த பாதையை அரச குடும்பம் மட்டுமே பயன்படுத்தினார்கள்.
- எதிர்பாராத யுத்தத்தின் போது மக்களை காப்பதற்காக இப்பாதையை பயன்படுத்தியுள்ளனர்.
புதையல்கள்
- பல இரகசிய அறைகளைக்கட்டி அதில் விலையுயர்ந்த பொருட்களை மறைத்து வைத்துள்ளனர்.
- அதுமட்டுமல்லாமல் இரகசிய மந்திரம் கூறினால் மாத்திரமே அக்கதவுகள் திறக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம்
- அப்பகுதியில் ஆறு பூகம்பங்கள் ஏற்பட்ட போதிலும் இந்த கோவில் அசையாமல் இருந்தப்படியே நின்றுள்ளது என்பது நெகிழ வைக்கும் உண்மையாகும்.
ஓவியம்
- கோவிலில் அழகான ஓவியங்கள் காணப்படுகின்றன.
- அதை பல பூக்களின் சாயங்களை கொண்டு பூசியுள்ளனர்.
இவ்வளவு பிரம்பாண்டமான வியக்க வைக்கக் கூடிய அளவிற்கு இந்த கோவிலைக் கட்டியவர்கள் பெருமைக்குறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.