அழிந்து வரும் உலக அதிசயங்கள்!! இது தான் காரணமா?
நாம் வாழும் உலகத்தில் பல உலக அதிசயங்கள் காணப்படுகின்றன. அதை பாதுகாக்கும் உரிமை எங்களுடையது தான். ஆனாலும் பல இயற்கையின் சீற்றத்தால் அழிவடையவுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வாறு இன்னும் சில ஆண்டுகளில் அழியவுள்ள சில உலக அதிசயங்கள் எவை என்று பார்ப்போம்.
ஈபிள் கோபுரம்
இதை பார்க்க ஒரு வருடத்திற்கு 70 லட்சத்துக்கு மேல் பார்வையிட பலர் வருகின்றனர்.
இது இரும்பால் செய்யப்பட்டுள்ளதால் துருப்பிடித்துள்ளது.
ஆகவே 2033 இற்குள் இது உடைந்து விழுந்து விடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தாஜ் மஹால்
இதை பார்க்க ஒரு வருடத்திற்கு 80 லட்சத்துக்கு மேல் பார்வையிட பலர் வருகின்றனர்.
வெள்ளையாக இருந்த இந்த தாஜ் மஹால் தற்போது மஞ்சள் மற்றும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது.
ஏனென்றால் வலி மாசடைவதன் காரணமாக தான். இருப்பினும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டது.
ஆகவே சில ஆண்டுகளில் தாஜ் மஹாலும் இடிந்து விழுந்து விடும் என செய்திகள் வெளியாகி வருகின்றது.
சீன பெருசுவர்
இதை கட்டி கிட்டத்தட்ட 2241 ஆண்டுகள் ஆகின்றது.
இதில் 30 சதவீத இடம் அழிந்துவிட்டது.
இது இவ்வளவு வேகமாக அழிந்து வருவதன் காரணம் என்ன தெரியுமா?
அது சீன மக்களின் மூடநம்பிக்கை தான். இந்த பெருசுவர் நீண்ட காலமாக இருந்து வருவதால் இதில் இருந்து ஒரு கற்களை எடுத்து சென்று தனது வீடுகளை கட்டுவார்களாம்.
ஆகவே இது அழிந்து வருவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் 2040 ஆண்டாகும் போது இது அழிந்து விடும்.
பீசாவின் சாய்ந்த கோபுரம்
இந்த கோபுரம் சாய்ந்து தான் காணப்படுகிறது. ஏனென்றால் இதை கட்டியது ஆற்று மணலில். ஆகவே இது சிறு நில நடுக்கம் வந்தாலும் அழிந்து விடும் என கூறுகின்றனர்.
இசுபிங்சு இது
கட்டப்பட்டு சுமார் 4500 ஆண்டுகள் ஆகின்றது.
ஏற்கனவே இதின் மூக்கு மற்றும் தாடை பகுதி உடைந்துவிட்டது.
அங்கு வீசம் மணல் காற்றால் இது முழுவதுமாக உடைந்து விழ பல சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறுகின்றன.
வெனிஸ் நகரம்
இந்த நகரத்தை பெரும்பாலனவர்கள் காதல் நகரம் என்று தான் கூறுவார்கள்.
அவ்வளவு அழகாக இருந்த இந்த நகரம் தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் தண்ணீர் வற்றி பார்ப்பதற்கும் அழகாக காட்சியளிக்கவில்லை என கூறுகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் வாழவே தகுதியற்ற இடமாக மாறிவிடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
கல்வட்டம்
இந்த கல்வட்டத்தை சுமார் 5000 வருடத்திற்கு முன்பாக பிரித்தானியாவில் கட்டியுள்ளனர்.
இதில் ஏற்கனவே சில கற்கள் விழுந்துள்ளது.
அதனால் எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் இந்த கற்கள் அனைத்தும் விழுந்து விடும் என கூறப்படுகிறது.