வானில் ஐந்து முறை தோன்றிய அதிசயங்கள்: இளவரசர் வில்லியம் கேட் பகிர்ந்த நெகிழவைக்கும் தகவல்
ஸ்காட்லாந்தில் வானவில்லைப் பார்ப்பதே அபூர்வம்.
மகாராணியாரின் மறைவுக்குப்பின் பால்மோரல் மாளிகையின் மீது மட்டும் ஐந்து முறை வானவில் உருவாகியுள்ளது.
ஸ்காட்லாந்தில் வானவில்லைப் பார்ப்பதே அபூர்வம்...
ஆனால், பிரித்தானிய மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து பால்மோரல் மாளிகையின் மீது மட்டும் ஐந்து முறை வானவில் உருவாகியுள்ளது.
இந்த விடயத்தைச் சொன்னது வேறு யாருமில்லை, மகாராணியாரின் பேரன் இளவரசர் வில்லியம்தான்!
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து, பின்னணியில் நின்று பணியாற்றிய, தூக்கிச்செல்லும் கழிவறைகளில் பணிபுரிந்தோர், குப்பை அகற்றுவோர் மற்றும் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் மலைபோல் கொண்டு குவித்த மலர்களை பின்னர் அகற்றி தூய்மைப்படுத்தியவர்கள் முதலான பணியாளர்களுக்கு இளவரசர் வில்லியமும் கேட்டும் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
Credit: PA
அப்போது, இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேட்டும், இந்த வானவில் தோன்றிய விடயத்தை நினவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார்கள்.
இளவரசி கேட்டிடம், ஸ்காட்லாந்தில் எத்தனை வானவில்கள் உருவாகின? பொதுவாக ஸ்காட்லாந்தில் வானவில்லைப் பார்ப்பது அபூர்வம் இல்லையா என்று கேட்ட இளவரசர் வில்லியம், ஆனால், மகாராணியார் கடைசியாக தங்கியிருந்த பால்மோரல் மாளிகையின் மீது மட்டும் ஐந்து முறை வானவில் உருவானது என்றார்.
உடனே, இளவரசி கேட், மேன்மை தங்கிய மகாராணியார் மேலிருந்து நம்மைப் பார்த்ததுதான் அந்த வானவில்லுக்கு அர்த்தம் என்று கூறி நெகிழ்ந்தார்.
Credit: Getty
பிரித்தானிய மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து விண்ட்சர் மாளிகையின் மீது வானவில் ஒன்று உருவானதைக் கண்ட மக்கள், அதை மகாராணியாரின் மறைவுடன் இணைத்துப் பார்த்து நெகிழ்ந்தார்கள்.
பின்னர் பக்கிங்காம் மாளிகையின் மீது இரட்டை வானவில் உருவானது.
அதைத் தொடர்ந்து, மகாராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் முடிவுக்கு வந்த அந்த நேரத்தில், மீண்டும் ஒரு வானவில் வானத்தில் தோன்றியதால் மக்கள் ஆச்சரியத்தில் திளைத்தது குறிப்பிடத்தக்கது.