பிரான்ஸ், பிரித்தானியாவை அடுத்து... ஈரான் விவகாரத்தில் ட்ரம்பை கைவிட்ட கனடா

Middle East Israel-Iran conflict
By Arbin Mar 18, 2026 03:25 AM GMT
Report

ஈரான் போர் தொடர்பில் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, ட்ரம்பின் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது.

பங்கேற்கும் நோக்கம் இல்லை

அமெரிக்காவுடன் இணைந்து எந்தவொரு தாக்குதல் இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் நோக்கம் இல்லை என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியாவை அடுத்து... ஈரான் விவகாரத்தில் ட்ரம்பை கைவிட்ட கனடா | Wont Join Offensive Action

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை அடுத்து ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், அமெரிக்காவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு அமெரிக்க இராணுவம் பாதுகாப்பளிக்கும் என அறிவித்திருந்த ட்ரம்ப், அது ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியைக் கோரினார்.

ஆனால், அதில் இருக்கும் சிக்கலை உணர்ந்துள்ள நாடுகள் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தமக்கு உதவாத நாடுகளுக்கு மிக மோசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை

ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தீர்வு: உலக நாடுகளுக்கு ஈரான் ஒற்றைக் கோரிக்கை

இந்த நிலையில் தற்போது கனடாவும் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் தொடர்பான மோதலைத் தணிப்பதும் பொதுமக்களைப் பாதுகாப்பதுமே கனடாவின் முன்னுரிமை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆனந்த் துருக்கிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், ஈரான் விவகாரத்தில் கனடாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், எந்த விதமான இராணுவ நடவடிக்கையிலும் கனடா பங்கேற்காது என்றும், மேலும் ஈரான் மீதான தாக்குதல் இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் நோக்கமும் கனடாவிற்கு இல்லை என்றும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், பிரித்தானியாவை அடுத்து... ஈரான் விவகாரத்தில் ட்ரம்பை கைவிட்ட கனடா | Wont Join Offensive Action

மேலும், கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையானது, பதற்றத்தைத் தணித்தல், பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் பொதுவாக மனிதாபிமானம் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும் என்றார்.

முதன்மை முன்னுரிமை

பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதே தலையாய முன்னுரிமை என்பதில் துருக்கியும் கனடாவும் உடன்பட்டுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து, ஈரானிலிருந்து துருக்கியின் வான்வெளியை நோக்கி ஏவப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளன.

இந்த நடவடிக்கை, துருக்கியப் பிரதேசத்தில் கூடுதலாக ஒரு பேட்ரியாட் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துமாறு கூட்டணியைக் கட்டாயப்படுத்தியது.

பிரான்ஸ், பிரித்தானியாவை அடுத்து... ஈரான் விவகாரத்தில் ட்ரம்பை கைவிட்ட கனடா | Wont Join Offensive Action

இதனிடையே, ஈரான் விவகாரத்தில் தலையிடாமல் விலகி இருப்பதே துருக்கியின் முதன்மை முன்னுரிமை என்றும், இந்த கட்டத்தில் இராணுவ ரீதியான பதிலடியை துருக்கி நிராகரிப்பதாகவும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் காரணமாக லெபனானில் அதிகரித்து வரும் வன்முறையின் கடுமையான விளைவுகள் குறித்து எச்சரித்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US