நிலத்தை பிய்த்துக் கொண்டு பறந்த ஸ்டம்ப்! மிரண்டு நின்ற வீரர்..அனல் பறக்கும் ஆஷஸ்
ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
எகிறிய ஸ்டம்ப்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 4 ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மார்க் வுட் வீசிய பந்து கவாஜாவின் ஸ்டம்ப் எகிற வைத்தது. நிலத்தைவிட்டு ஸ்டம்ப் பிடுங்கிக் கொண்டு பறந்ததால் கவாஜா மிரண்டு நின்றார்.
It's full and straight and far too quick for Usman Khawaja ?️
— England Cricket (@englandcricket) July 6, 2023
Australia are 2 down and Mark Wood is on fire! ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/y5MAB1rWxd
தடுமாறிய அவுஸ்திரேலியா
அடுத்து வந்த லபுசாக்ஃனே 21 ஓட்டங்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் அதிரடியில் மிரட்டிய மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தார். அவுஸ்திரேலியா தற்போது 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மார்ஷ் 63 ஓட்டங்களுடனும், டிராவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |