கத்தியால் தாக்கப்பட்ட பிரித்தானிய சிறுவன்... கடைசியாக கூறிய அந்த வார்த்தை: வெளிவரும் தகவல்
தென் கிழக்கு லண்டனில் கத்தியால் தாக்கப்பட்ட சிறுவன் இறப்பதற்கு முன்பு கடைசியாக கெஞ்சிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுவன் ரத்தவெள்ளத்தில்
தென் கிழக்கு லண்டனில் வூல்விச் பகுதியில் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 6.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ரத்தவெள்ளத்தில் குற்றுயிராக காணப்பட்டதை உறுதி செய்தனர். ஆனால் முதலுதவி அளித்த நிலையில், சில நிமிடங்களிலேயே மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில், சிறுவனை காப்பாற்ற முயன்ற 43 வயது பெண்மணி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்துவரும் அந்த பெண்மணி, ரத்தவெள்ளத்தில் சாலையோரம் அந்த சிறுவனை காண நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சிறுவன் கெஞ்சியதாக
அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்து வெளியே வந்ததாகவும், பின்னர் சத்தம் வந்த திசையில் சென்றபோது குப்புறபப்டுத்திருந்த சிறுவனைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவசர மருத்துவ உதவிக் குழுவினர் சம்பவயிடத்திற்கு வரும் வரையில், சிறுவனை காப்பாற்ற முயன்றதாகவும், இந்த நிலையிலேயே தமக்கு வெறும் 15 வயது என்றும், உயிரை காப்பாற்றுங்கள் என அந்த சிறுவன் கெஞ்சியதாகவும் குறித்த பெண்மனி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவன் தொடர்பில் உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளதாகவும், தாக்குதல்தாரி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |