உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய வீரர்! யார் அவர் தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்யின், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில், நியூசிலாந்து அணியில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட வீரர் இடம் பெற்றுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் பல்வேறு பாதுகாப்புகளுடன் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் ஜுன் மாதம் 18-ஆம் திகதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது, நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மும்பையில் பிறந்து வளர்ந்தவரை தங்கள் அணியில் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியை சேர்ந்த 32 வயதுடைய வீரரான அஜாஸ் படேல் மும்பையில் 1988ஆம் ஆண்டில் பிறந்தார். பின்னர் இங்கிருந்து நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர் தற்போது நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். 2018-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான அஜாஸ் படேல் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 2 டி20 போட்டிகளில் அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நியூசிலாந்தில் குடியேறிய நான் இங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கி விளையாடி வருகிறேன்.
இப்போது நான் என்னுடைய பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்காக விளையாட உள்ளது அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.