பிரித்தானியாவில் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடு! கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிகாட்டுதல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ‘பிளான் பி’ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சில கட்டுப்பாடுகள் அறிமுகப்பட்டுத்தப்பட்டது.
இதில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிகாட்டுதல், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் பெரிய நிகழ்வுகளில் பங்கேற்க கட்டாய கொரோனா பாஸ் அடங்கும்.
இந்த கட்டுப்பாடுகள் 6 வாரத்திற்கு அமுலில் இருக்கும் எனவும், 3 வாரங்களுக்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை ஜனவரி 4 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை புதன்கிழமை நடைபெறக்கூடும் எனவும், வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிகாட்டுதல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி தொடக்கத்தில், முடிந்தவரை அதற்கு முன்னர் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.