வீட்டில் இருந்தபடியே பணி: சுவிஸில் பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்கள் உறுதி
சுவிட்சர்லாந்தில் தங்கள் நிறுவனங்களுக்கே வந்து ஊழியர்கள் பணி செய்யும் நடவடிக்கைகளை பல மண்டலங்கள் ஊக்குவிக்கும் நிலையில், குறிப்பிட்ட சில மண்டலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சுவிஸில் பாதிக்கும் மேற்பட்ட மண்டலங்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடவடிக்கையை ரத்து செய்யும் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பில் சூரிச், பாஸல், St. Gallen, Uri உள்ளிட்ட மண்டலங்கள் பெடரல் கவுன்சிலுக்கும் கோரிக்கை வைத்துள்ளன.
பலர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்வதால் சிறப்பாக செயல்படுவதில்லை. அவர்கள் குடும்ப அழுத்தத்தில் உள்ளனர் என St. Gallen மண்டல பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இதற்கு நேரெதிராக பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்கள், ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகின்றன. தற்போதை சூழலில், ஊழியர்களை மொத்தமாக நிறுவனங்களுக்கு அழைத்தால், இன்னொரு கொரோனா அலைக்கு அது காரணமாகலாம் என ஆர்காவ் உள்ளிட்ட மண்டலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
லூசர்ன் மண்டலமும், இதே நிலை தொடர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, வீட்டிலிருந்து வேலை செய்வது தொற்றுநோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் என்ற ஆய்வு முடிவுக்கு கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் வந்துள்ளது.
மேலும், நிறுவனங்களில் சென்று பணியாற்றும் ஊழியர்களைவிட வீட்டில் இருந்து பணியாறும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.