கழிவறைக்குச் சென்று அழுதேன், வாரம் 100 மணிநேரம் வேலை செய்தேன்: பணிநேரம் குறித்து பெண் சிஇஓ விமர்சனம்
வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி தலைவர் பேசிய நிலையில் பெண் சிஇஓ ஒருவர் தனது கருத்தை கூறியுள்ளார்.
அவர் கூறியது
பணி நேரம் தொடர்பாக எல் அண்ட் டி நிறுவனத்தின் சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் கூறுகையில், "பணியாளர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைக்க முடியவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? மனைவி எவ்வளவு நேரம் கணவரை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே சமயம் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நீங்கள் உலகின் டாப்பில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்" என்றார்.
இவரின் கருத்துக்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராதிகா குப்தா கூறுகையில், "சாய்ஸ், கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சி என்று தலைப்பிட்டு பேச தொடங்கியுள்ளார்.
என்னுடைய முதல் வேலையில் நான் நான்கு மாதங்கள் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்தேன். ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை, அதுவும் ஞாயிற்றுக் கிழமை அல்ல. திங்கள் கிழமை தான் விடுமுறை கிடைத்தது.
நான் பரிதாபகரமாக இருந்தேன். அலுவலக கழிவறைக்குச் சென்று அழுதேன். இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்" என்கிறார்.
மேலும் அவர், "கடின உழைப்பு மற்றும் அதனுடைய பலன் என்பது எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதில் இல்லை" என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |