பியூனாகவும் வேலை பார்த்தவர்... சகோதரருடன் இணைந்து ரூ 139,000 கோடி நிறுவனத்தை உருவாக்கியவர்: யார் இவர்
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தொழில் தொடங்கி, தற்போதும் வணிகத்தில் கோலோச்சும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கியவர் Balvant Parekh.
இந்தியாவின் ஃபெவிகால் மனிதர்
குஜராத் மாகாணத்தை சேர்ந்த Balvant Parekh உண்மையில் ஒரு புத்தகப்புழு, பியூனாகவும் வேலை பார்த்திருக்கிறார். சட்டம் பயின்றவர், சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.
Pidilite என்ற பில்லியன் டொலர் நிறுவனத்தை நிறுவியர் Balvant Parekh. இந்தியாவின் ஃபெவிகால் மனிதர் என பரவலாக அறியப்படும் Balvant Parekh தனது குஜராத் மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார்.
ஒரு கல்லூரி, ஒரு மருத்துவமனை என சமூக பங்காற்றியுள்ளார். இளைஞரான பல்வந்த் பரேக், நாடு சுதந்திரத்திற்காக போராடி வந்த போது துடிப்புடன் அதில் பங்கேற்றார். ஆனால் குடும்பத்தினரின் கட்டாயத்திற்கு பணிந்து சட்டம் பயில முடிவு செய்தார்.
பட்டம் பெற்ற பின்னரும் அவரது எண்ணம் முழுக்க புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்றே இருந்துள்ளது. தொழிற்சாலை ஒன்றின் அடித்தளத்தில் தமது மனைவியுடன் தங்கியிருந்து, பியூனாகவும் வேலை பார்த்திருகிறார் பல்வந்த் பரேக்.
தமது சகோதரருடன் இணைந்து
பல ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு ஜேர்மனி செல்ல வாய்ப்பு அமைந்தது. அங்கே அவர் தொழில் தொடங்க தேவையான அறிவைப் பெற்றுள்ளார். இந்தியா திரும்பிய பிறகு மும்பையில் தமது சகோதரருடன் இணைந்து பரேக் டைசெம் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனமே ஃபெவிகால் என்ற பிசினை உருவாக்கியது. 1959ல் இந்தியாவில் ஃபெவிகால் என்ற பிசின் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபெவிகால் பிரபலமடைய. சில ஆண்டுகளில், Pidilite என பெயர் மாற்றம் பெற்றது பரேக் டைசெம் இண்டஸ்ட்ரீஸ்.
மட்டுமின்றி தச்சர்கள் பரவலாக பயன்படுத்தும் வகையில் ஃபெவிகால் பிரபலமானது. தொடக்கத்தில் ஒரே ஒரு கடை திறக்கப்பட்டு, வியாபாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பிசின் சந்தையில் முன்னணி நிறுவனமாக மாறியது Pidilite. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 139,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |