முன்பு கூகிளில் பணியாற்றியவர்... இன்று ரூ 302216 கோடிக்கு Chrome browser வாங்க முடிவு
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் கூகிளின் குரோம் ஒன்றாகும். தற்போது, மூன்று வருட பழமையான நிறுவனம் ஒன்று அந்த பிரவுசரை 34.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க விரும்புகிறது.
Chrome-ஐ கையகப்படுத்த
இந்திய வம்சாவளி நபரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரால் தொடங்கப்பட்ட Perplexity AI என்ற நிறுவனமே ரூ 302,216 கோடிக்கு குரோம் பவுசரை வாங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் TikTok நிறுவனத்தை வாங்கவும் Perplexity AI இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை முன்வைத்தது. தற்போது Chrome ஐ வாங்குவதால், AI தேடல் பந்தயத்தில் ஒரு முன்னணி இடத்தைப் பெறவும், அந்த பிரவுசரின் மூன்று பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தவும் அனுமதிக்கும்.
Comet என Perplexity AI நிறுவனத்திற்கு தனியாக ஒரு பிரவுசர் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் Chrome-ஐ கையகப்படுத்துவது OpenAI போன்ற பெரிய போட்டியாளர்களுக்கு எதிராக சிறப்பான போட்டியை முன்வைக்க முடியும் என Perplexity AI நிறுவனம் நம்புகிறது.
Perplexity AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ் ஒரு இந்திய வம்சாவளி பொறியாளர், இவர் 2017 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் மின் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றார்.
சந்தை மதிப்பு 18 பில்லியன்
அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஸ்ரீனிவாஸ் 2022 ஆம் ஆண்டில் ஆண்டி கோன்வின்ஸ்கி, டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஜானி ஹோ ஆகியோருடன் இணைந்து Perplexity AI நிறுவனத்தை நிறுவினார்.
பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனம் இதுவரை என்விடியா மற்றும் ஜப்பானின் சாஃப்ட் பேங்க் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திரட்டியுள்ளது. Perplexity நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |