அன்று ரூ 9,000 சம்பளத்தில் இன்ஃபோசிஸில் office boy வேலை... இன்று இரண்டு நிறுவனங்களின் CEO
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் மகன், தமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இன்று இரண்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
இன்ஃபோசிஸ் விடுதியில் office boy வேலை
மகாராஷ்டிராவின் பீட் பகுதியை சேர்ந்தவர் Dadasaheb Bhagat. குடும்ப சூழல் காரணமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக புனே சென்றார்.
ஆனால் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த அவர், பின்னர் ஐடிஐ டிப்ளமோ முடித்து, ரூ 9,000 சம்பளத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தங்கும் விடுதி ஒன்றில் office boy வேலைக்கு சேர்ந்தார்.
அதுவே அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. மென்பொருள் துறை குறித்தும், எதிர்காலத்தில் அதன் தாக்கம் குறித்தும் தெரிந்துகொண்ட பகத், பட்டப்படிப்பு இல்லை என்பதால் தமது திறமையால் மென்பொருள் துறையை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
தொடர்ந்து அனிமேஷன் மற்றும் டிசைன் துறையில் வேலைவாய்ப்பு மிகுதியாக இருப்பதை அறிந்து, மாலை நேர வகுப்புகளில் இணைந்து கொண்டார். பகலில் office boy வேலைக்கு சென்றார்.
அனிமேஷன் மற்றும் டிசைன் படிப்பை முடித்தவருக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்துள்ளது. அத்துடன் இணையத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் டிசைன்களை (templates) விற்பனை செய்யவும் தொடங்கினார்.
ஆனால் எதிர்பாராத வகையில் கார் விபத்தில் சிக்கிய பகத், வேலையை விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் இணையத்தில் தமது டிசைகளை விற்பனை செய்வதை அவர் விட்டுவிடவில்லை.
6,000 வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில் தான் Ninthmotion என்ற தமது முதல் நிறுவனத்தை பகத் தொடங்கியுள்ளார். குறுகிய காலத்தில் உலகம் முழுவதில் இருந்தும் 6,000 வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது Ninthmotion நிறுவனம்.
இதில் BBC Studios மற்றும் 9XM நிறுவனங்களும் இவரது குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்கள். இதன் பின்னர் இணையத்திலேயே டிசைன் செய்துகொள்ளும் வகையில் பிரபலமான Canva நிறுவனம் போன்று ஒரு இணைய பக்கத்தை உருவாக்க முடிவு செய்து தொடங்கப்பட்டது தான் DooGraphics.
இது இவரது இரண்டாவது நிறுவனம். தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, 10,000 வாடிக்கையாளர்களை இவரது நிறுவனம் ஈர்த்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூர், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து இவரது சேவையை பலர் நாடியுள்ளனர்.
சிலர் ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். இவரது நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 2 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |