கேபிள் ரயிலில் சிக்கி 10 மீற்றர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட பணியாளரின் பரிதாப நிலை
சுவிட்சர்லாந்தில், கேபிள் ரயிலில் சிக்கி 10 மீற்றர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Grisons அல்லது Graubünden மாகாணத்தில், 61 வயதுடைய ரயில்வே பணியாளர் ஒருவர் ரயில் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கேபிள் ரயில் ஒன்றின் பின்பக்கத்தில் சிக்கி 10 மீற்றர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு ஹெலிகொப்டரில் விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவருடைய கால்களில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களுக்கு அங்கு வைத்தே சிக்கிசையளித்து, பின்னர் அவரை Chur என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளர்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பணியாளரின் சகப் பணியாளர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.