பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் மொத்த சொத்து மதிப்பு: கசிந்த தகவல்
உழைக்கும் வர்க்கம் என தம்மை அடையாளப்படுத்தும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மணிக்கு 400 பவுண்டுகள்
நீண்ட 20 ஆண்டுகள் சட்டத்தரணியாக பணியாற்றியதன் பின்னரே சர் கெய்ர் ஸ்டார்மர் அரசியலில் களம் கண்டுள்ளார். ஆனால் அதற்கு முன்னரே நாட்டில் 1 சதவிகிதம் இருக்கும் அதிகம் சம்பாதிப்பவர்கள் வட்டத்தில் சர் கெய்ர் ஸ்டார்மர் இடம்பிடித்துள்ளார்.
குடியிருப்பு விற்பனை மற்றும் ஓய்வூதியம் ஆகியவை மட்டுமே அவரது சொத்து மதிப்பில் 3 மில்லியன் பவுண்டுகளை சேர்த்துள்ளது. 2020ல் லேபர் கட்சி தலைமைக்கு அவர் போட்டியிடும் போது மணிக்கு 400 பவுண்டுகள் வசூலிக்கும் சட்டத்தரணியாக அறியப்பட்டார்.
அவருக்கு சொந்தமான வடக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு மட்டும் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்டது. 2004ல் தமது மனைவி விக்டோரியாவுடன் இணைந்து 650,000 பவுண்டுகளுக்கு வாங்கிய குடியிருப்புக்கு தற்போது 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு என கூறப்படுகிறது.
62 வயதான சர் கெய்ர் ஸ்டார்மர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாட்டின் பிரதமராகவும் இரண்டு சம்பளம் பெறுகிறார். மொத்தமாக 166,786 பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
முன்னர் சட்டத்தரணியாக பணியாற்றியுள்ள இவரது மனைவி விக்டோரியா தற்போது NHS-ல் பணியாற்றுகிறார். விக்டோரியாவின் சம்பளம் 50,000 பவுண்டுகள் இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
சட்ட ஆலோசனைகள்
2008 முதல் 2013 வரையில் DPP பொறுப்பில் இருந்த கெய்ர் ஸ்டார்மர் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் சம்பாதித்துள்ளார். மட்டுமின்றி ஓய்வூதியமாக 700,000 பவுண்டுகள் பெற்றுள்ளார். DPP என்பதால் இவரது ஓய்வூதிய தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
ஆனால் DPP பொறுப்பில் இருந்து இவர் விலகியதும் வரி சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. DPP பொறுப்பில் இருந்து விலகியதன் பின்னர் சட்ட ஆலோசனைகளுக்காக குறிப்பிடத்தக்க தொகை சம்பளமாக வாங்கியுள்ளார்.
Mishcon de Reya நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைகள் வழங்கியதற்கு குறைந்தது 100,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்துள்ளார். 2020 மற்றும் 2021ல் சட்ட ஆலோசனை வழங்கியதற்காக 21,000 பவுண்டுகள் சம்பாதித்துள்ளார்.
ஆனால் 2020 ஏப்ரல் மாதம் லேபர் கட்சியின் தலைவராக தெரிவானதன் பின்னர் சட்ட ஆலோசனை வழங்குவதை கைவிட்டுள்ளார். அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பளம் மற்றும் குடியிருப்பு விற்பனை உள்ளிட்டவையில் இருந்து 200,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக ஸ்டார்மர் சம்பாதித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |