ஜேர்மனியில் இந்த துறையில் பணி செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவை
ஜேர்மனியில் பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு துறைகள் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுக்கொண்டிருந்தாலும்,சில குறிப்பிட்ட துறைகள் அதிக அளவில் பணியாளர்களை பணிக்கு எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
ஜேர்மனியில் ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ளன
சமீபத்திய ஆய்வு ஒன்றில், Institute for Labour Market and Occupational Research (IAB) என்னும் அமைப்பு, மூன்றாவது காலாண்டில் வரலாறு காணாத அளவுக்கு வேலை காலியிடங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 1.93 மில்லியன் பணியிடங்கள் காலியாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இப்போதும் எல்லா இடங்களிலும் ஆட்களை வேலைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் IAB தெரிவித்துள்ளது.
கட்டுமானத்துறைக்கு அதிக பணியாளர்கள் தேவை
குறிப்பாக கட்டுமானத்துறைக்கு அதிக அளவில் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோக, விருந்தோம்பல் துறை, logistics specialists, mechanical engineering மற்றும் மருத்துவர்களுக்கும் தேவை உள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், பல நிறுவனங்கள், அனுபவம் வாய்ந்த heat pump installers என்னும் பணி செய்வோர் முதல் ஆடிட்டர்கள் வரை பல்வேறு தரப்பட்ட பணியாளர்களை தொடர்ந்து பணிக்கு எடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன என்கிறார்கள்.
Photo: picture alliance/dpa | Carsten Koall