சுவிட்சர்லாந்து துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறை
சுவிற்சர்லாந்தில் அமையப்பெற்றுள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தால் இன்று காலை 10 மணியிலிருந்து எமது சமயம், கலாச்சாரம் மற்றும் ஆலயம் சம்பந்தமாக எம் இளம் தலைமுறைகளுக்கு விளக்க பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கடந்த ஞாயிறன்று(23.3.2025) காலை 10:00 மணியிலிருந்து 14:00 மணி வரை மதிய உணவுடன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள Root Pfarreiheim மண்டபத்தில் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வினை சைவநெறிக்கூடம் திரு கீர்த்தி மற்றும் சசி ஐயா தொகுத்து வழங்கினார்கள்.
ஆலயத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எமது சமயம், கலாச்சாரம் மற்றும் ஆலயம் சம்பந்தமாக விளக்கங்கள் கொடுப்பதற்கும் எம் இளம் தலைமுறைகளுக்கு எமது சமயம் சம்பந்தமான விளக்கங்கள் கொடுப்பதற்கும் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
ஆர்வம் உள்ள ஜெர்மன் மொழி தெரிந்த பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
துர்க்கை அம்மன் ஆலயத்தால் இலவசமாக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில், எதிர்பார்த்ததை விட அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டு எமது சமயம் சம்பந்தமான விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














