உலகின் தலைசிறந்த 10 இனிப்புகளில் இந்தியாவிற்கு இடம் இருக்கா?
உலகிலேயே மிக சுவையான இனிப்பு வகைகளில் முதல் 10 இடத்தை இந்தியாவின் இனிப்பு பண்டங்கள் பெற்றுள்ளது.
இந்தியாவின் இனிப்பு
வட இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய பிர்னி 7 வது இடத்தையும், அதே நேரத்தில்கீர் 10 வது இடத்தையும் பெற்றுள்ளது.
வட இந்தியாவில் ஒரு பிரபல்யமான இனிப்புப் பண்டமான பிர்னி, அரைத்த அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்டு, பாதாம், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் நறுமண சாரம் கொண்ட பாலில் வேகவைக்கப்பட்டு செய்யப்படுகிறது.
பாயாசம் என்றும் அழைக்கப்படும் கீர், ஒரிசாவில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றத்தைக் கண்டறியும் ஒரு இனிப்பாக செய்யப்பட்டது. இதுவும் அந்த பட்டியலில் தகுதியான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த இரண்டு இனிப்பு வகைகளும் உலகளவில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு இடத்தை பெற்றுதந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |