முகேஷ் அம்பானியின் வீட்டை விட... உலகின் மிகப்பெரிய வீட்டுக்கு உரிமையாளர்: அவர் சொத்து மதிப்பு
உலகிலேயே மிகவும் ஆடம்பர வீடுகளில் ஒன்று முகேஷ் அம்பானியின் Antilia மாளிகை. ஆனால் உலகின் மிகப்பெரிய வீடு புருனே சுல்தானுக்கு சொந்தமானது.
உலகின் மிகப்பெரிய குடியிருப்பு
புருனே சுல்தானின் மாளிகையின் பெயர் இஸ்தானா நூருல் ஈமான். புருனே நாட்டின் பிரதமராகவும் சுல்தானாகவும் செயல்பட்டு வருபவர் ஹசனல் போல்கியா.
Credit: atlasobscura
புருனே சுல்தானாக முடி சூட்டிய பின்னர் பல தசாப்தங்களாக இவர் இந்த மாளிகையில் தான் குடியிருந்து வருகிறார். இவரது மாளிகையானது பரப்பளவை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய குடியிருப்பு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனையை விடவும் மிகப்பெரியது இஸ்தானா நூருல் ஈமான் என கூறுகின்றனர். முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா மாளிகையானது சுமார் 4 லட்சம் சதுர அடி எனவும்,
மாளிகையின் மொத்த மதிப்பு ரூ.11,600 கோடி
குஜராத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனையானது 8 லட்சம் சதுர அடி எனவும் கூறப்படும் நிலையில் புருனே சுல்தானின் மாளிகையானது 2.2 மில்லியன் சதுர அடி என தெரியவந்துள்ளது.
Credit: atlasobscura
தங்கத்தால் இழைக்கப்பட்ட இஸ்தானா நூருல் ஈமான் மாளிகையானது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. 1960களில் இருந்தே ஹசனல் போல்கியா சுல்தான் இந்த மாளிகையில் குடியிருந்து வருகிறார்.
மேலும், 7,000 சொகுசு வாகனங்களும் இந்த மாளிகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான கார்களின் மொத்த மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.
இஸ்தானா நூருல் ஈமான் மாளிகையின் மொத்த மதிப்பு ரூ.11,600 கோடி புரூனே சுல்தானின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ.2.49 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: atlasobscura
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |