அமெரிக்கா விதித்த புதிய பொருளாதார தடை: கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை காரணமாக உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
புதிய பொருளாதார தடைகள்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை சுட்டிக்காட்டி அமெரிக்கா ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது.
இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிரான தடை தொகுப்புகளை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக வியாழக்கிழமை உலக கச்சா எண்ணெய் விலைகளின் இரண்டு முக்கிய அளவுகோல்களும் 5%-க்கு மேல் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் சந்தை நிலவரம்
பியூச்சர்ஸ் சந்தையில் உடனடியாக தடைகளின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
அதிகாலை 5:19 மணி அளவில் டிசம்பர் மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) 5.21% ஏற்றம் கண்டு பேரல் ஒன்றுக்கு $61.51 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைப்போல, டிசம்பர் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் க்ரூட்(Brent Crude) 5.11% ஏற்றம் கண்டு பேரல் ஒன்றுக்கு $65.72 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |