உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை அடித்து நொறுக்கி அவுஸ்திரேலிய அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இலங்கை
லக்னோவில் நடந்து வரும் உலக கோப்பை ஆட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வை செய்தது.
தொடக்க வீரர்களான பதும் நிசங்கா - குசால் பெரேரா அவுஸ்திரேலிய பந்துவீச்சினை விளாசி தள்ளினர். நிசங்கா 61 (67) ஓட்டங்களும், குசால் பெரேரா 78 (82) ஓட்டங்களும் எடுத்தனர்.
Sri Lanka bowled out for 209.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 16, 2023
It's our time to defend with all our might!#LankanLions #SLvAUS #CWC23 pic.twitter.com/mO36oS96Xe
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய தவறியதால் இலங்கை அணி 43.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ஓட்டங்கள் குவித்தனர்.
அடித்து நொறுக்கிய அவுஸ்திரேலியா
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ்(52) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர்.
பின் களத்தில் இறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 59 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்து அரைசதம் கடந்தார். இறுதியில் 35.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அவுஸ்திரேலிய 215 ஓட்டங்கள் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது.
news18
இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |