உலகக்கோப்பையில் இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை: காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து மோதல்
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதில் விளையாடிய 4 போட்டிகளும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதன்மை இடங்களில் உள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
வங்கதேச அணியுடனான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு இடதுகை காலில் காயம் ஏற்பட்டது, பின் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய பாண்டியா சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா வெளியேறியதை தொடர்ந்து, அவரது இழப்பை சரி செய்ய இந்திய அணி 5 பவுலர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |