திக்குமுக்காடிய நெதர்லாந்து அணி: 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான்-நெதர்லாந்து மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 75 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 68 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
நெதர்லாந்து பந்துவீச்சை பொறுத்தவரை பாஸ் டி லீடே மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்
இதையடுத்து பெரிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் பக்கம் சரிய தொடங்கியது.
நெதர்லாந்தின் முன்னணி வீரர் விக்ரம்ஜித் சிங் 52 ஓட்டங்களையும், பாஸ் டி லீடே 67 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் சீரான ஓட்டங்களை குவிக்க தவறியதால் நெதர்லாந்து அணி 41 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
காதலியின் கண் முன்னே காதலனின் இதயத்தில் கத்தியால் குத்திய மர்ம நபர்: அமெரிக்காவில் அரங்கேறிய பயங்கரம்
இதன் மூலம் உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |