வீணான குசல் மெண்டிஸ் அதிரடி அரைசதம்: 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை அணியை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பட்டையை கிளப்பிய தென் ஆப்பிரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லியில் தொடங்கிய இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 8 ஓட்டங்களில் வெளியேற, டி காக் மற்றும் டுசன் அதிரடியில் மிரட்டினர்.
டி காக் 84 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாசினார், மறுமுனையில் 110 பந்துகளில் டுசன் 108 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய எய்டென் மார்க்கரம் ருத்ர தாண்டவம் ஆடி வெறும் 54 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசி 108 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன்மூலம் உலக கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை எய்டென் மார்க்கரம் படைத்தார்.
50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 428 ஓட்டங்கள் குவித்தது.
அபார வெற்றி
இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க வீரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க(0), குசல் பெரேரா (7) ஓட்டங்களுடனும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால் இதையடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார்.
அவரை தொடர்ந்து சரித் அசலங்கா (79) ஓட்டங்களும், கேப்டன் தசுன் ஷனக 68 ஓட்டங்களும் குவித்தனர்.
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்திய தவறியதால் 44.5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
World Cup 2023: சிக்ஸர் மழையில் நனைந்த ரசிகர்கள்! மூவர் சதம் விளாசல்..429 ஓட்டங்கள் இலக்கை எட்டுமா இலங்கை?
இதனால் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி அபார பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |