கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிட்ச்: இந்தியா-நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் வெடித்துள்ள சர்ச்சை
கடைசி நேரத்தில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான போட்டியின் பிட்ச் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து மோதல்
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
லீக் சுற்றுகள் முடிவில் நியூசிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம்
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான போட்டியின் கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லீக் போட்டிகளில் பயன்படுத்தாத பீட்ச்சை அரையிறுதிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே 2 லீக் போட்டிகள் நடைபெற்ற பிட்சில் இன்றைய ஆட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணியை 55 ஓட்டங்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் செய்த அதே பிட்சில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் கடைசி நேரத்தில் பிட்ச் மாற்றம் செய்யப்பட்டது குறித்து சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India, New Zealand, INDvNZ, Wankhede, ICCWorldCup2023