உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
பிரித்தானியாவிலுள்ள லண்டன் ஓவல் மைதானத்தில், நடைபெறும் உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை சாம்பியன்ஷிப்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போட்டியிடும் உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியில், பங்குபெறும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
@cricbuzz
2021 முதல் 2023 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில், தரவரிசையில் முதல் இரண்டு இடம் பிடித்த இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது.
@pti
ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஹானேவிற்கு வாய்ப்பு
ஜீன் 7ஆம் திகதி துவங்கும் இப்போட்டியில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக ஆடி வரும் அஜின்கியா ரஹானேவும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
@cricbuzz
கே எஸ் பரத் அவுஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், இவர் இறுதிப் போட்டியில் முதன்மையான விக்கெட் கிப்பராகவும், துடுப்பாட்டக்காரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
@cricbuzz
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ராகுல், அஸ்வின், பரத், ரஹானே, ஜடேஜா, அக்சர் பட்டே, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
காயத்தால் அவதிப்படும் பும்ரா, ஸ்ரேயர்ஸ் அய்யர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.