டி20 உலக கிண்ணம்: ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
எதிர்வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் துபாய் மற்றும் ஓமனில் டி20 உலக கிண்ணம் தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் சூப்பர் 12 மற்றும் தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
பிரிவு 1ல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தகுதி சுற்றில் வெற்றிபெறும் இரு அணிகள்.
பிரிவு 2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தகுதி சுற்றில் தெரிவாகும் இரு அணிகள் விளையாட உள்ளனர்.
சூப்பர் 12 சுற்றுக்கு முன்னதாக தகுதி சுற்று இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.
கடந்த 2019ல் 50 ஓவர் உலக கிண்ணம் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியதில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.