எனது மகன் ஒழுக்கமானவன்... சாகவும் தயார்: முத்தத்தால் வெடித்த போராட்டம்
ஸ்பெயின் நாட்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாற வேண்டிய மகளிர் உலகக் கிண்ணம் வெற்றி, தற்போது ஒரு முத்த விவகாரம் நாட்டின் பெண்கள் அனைவரையும் வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.
நாட்டிற்காக களமிறங்குவதில்லை
மகளிர் உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்ற நிலையில், ஸ்பானிஷ் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் நட்சத்திர வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
@getty
ஆனால் உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகத்தில் ஜென்னி பதிவிட, உதட்டு முத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஜென்னி ஹெர்மோசோவுக்கு ஆதரவாக உலகக் கோப்பை மகளிர் அணியும் 56 வேறு மகளிர் கால்பந்து வீராங்கணைகளும் ஸ்பெயின் நாட்டிற்காக இனி களமிறங்குவதில்லை என அறிவித்துள்ளனர்.
ஃபிஃபா நிர்வாகமும் 90 நாட்களுக்கு கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் லூயிஸ் ரூபியேல்ஸை நீக்கியது. மட்டுமின்றி லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலக வேண்டும் என ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.
@AP
மகன் ஒழுக்கமானவன்
இருப்பினும், இருவரும் ஒத்திசைவுடனே முத்தமிட்டுகொண்டதாக லூயிஸ் ரூபியேல்ஸ் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், ஒட்டுமொத்த நாடும் தமது மகனுக்கு எதிராக இருப்பதாக கூறி, ரூபியேல்ஸின் தாயார் தேவாலயம் ஒன்றில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.
@getty
மேலும், தமது மகன் ஒழுக்கமானவன் என்பதால் நீதிக்காக இறக்கவும் தயாராக இருக்கிறேன் என அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |