இந்திய கிரிக்கெட் அணியை ஜெயிக்க முடியாம தொடர்ந்து அவங்ககிட்ட தோற்க இதான் காரணம்! உடைத்து பேசிய பிரபல வீரர்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னணி வீரர் இமாம் உல் ஹக் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி எப்போது நடந்தாலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் போட்டியாக அமையும்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடைபெறுவதில்லை. பாகிஸ்தான் அணியால் இந்திய அணியை உலக கோப்பை தொடர்களில் ஒருமுறை கூட வீழ்த்த முடியவில்லை.
இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 7 முறை உலகக் கோப்பை தொடரின் போது நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில் அந்த 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் உலகக்கோப்பை தொடர்களில் 5 முறை நேருக்கு நேர் விளையாடி 5 முறையும் இந்திய அணியே வென்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் இமாம் உல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை இதன் காரணமாகத்தான் உலக கோப்பை தொடரின் போது முக்கிய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி விடுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். அதனால் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் பாகிஸ்தான் அணியில் உலகக்கோப்பை தொடர்களில் பெரும்பாலோனோர் இளம் வீரர்கள் என்பதனால் அந்த அழுத்தத்தை அவர்கள் எதிர்கொள்ள கஷ்டப்படுகிறார்கள்.
வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் நிச்சயம் பாக்கிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தும் என நம்புவதாக கூறியுள்ளார்.