உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் அசம்பாவிதம்: ஹெலிகொப்டரில் வெளியேற்றப்பட்ட மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள்
அர்ஜென்டினாவில் உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்களை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீரர்களை பத்திரமாக வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொண்டாட்டங்கள் ரத்து
உலகக் கோப்பை வெற்றியாளர்களான மெஸ்ஸி உட்பட்ட வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளனர். மேலும், வீரர் சென்ற பேருந்தின் மீது ரசிகர்கள் குதித்ததே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
@luchodariok
இதனையடுத்து மெஸ்ஸி உட்பட வீரர்களை ஹெலிகொப்டரில் பத்திரமாக மீட்டு அவர்களின் பயிற்சி முகாமிற்கு கொண்டுச்சென்றுள்ளனர். ஆனால், தங்கள் நாட்டிற்கு உலகக் கோப்பையை வென்று தந்த வீரர்களை நேரில் காண குவிந்திருந்த மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மெஸ்ஸி உட்பட்ட வீரர்களுடன் குறித்த பேருந்து பாலம் ஒன்றை கடந்து சென்ற நிலையிலேயே, ரசிகர்கள் இருவர் அந்த பாலத்தின் மீதிருந்து பேருந்து மீது குதித்துள்ளனர். இதில் ஒருவர் பேருந்தின் உள்ளே விழ, இன்னொருவர் தவறி தரையில் விழுந்துள்ளார்.
@getty
மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதுகாப்பு
இதனையடுத்தே கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளனர். இந்த நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அமைப்பின் தலைவர் Chiqui Tapia தெரிவிக்கையில், மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த அமைப்பு அச்சுறுத்தல் காரணமாக விழாவினை ரத்து செய்ய கோரியதாகவும்,
@luchodariok
இதனால் ரசிகர்களை சந்திக்கும் எங்கள் திட்டமானது பாதியில் கைவிடப்பட்டதாகவும், வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.